பதிவு செய்த நாள்
27
செப்
2017
12:09
உத்திரமேரூர்: வராகியம்மன் மற்றும் ஆவுடையப்பன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லுாரில், பழமைவாய்ந்த தேவி கள்ளக்குறத்தியம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் வராகியம்மன் மற்றும் ஆவுடையப்பனுக்கு புதிதாக கோவில் அமைக்கும் பணி, சில மாதங்களாக நடந்து, சமீபத்தில் முடிந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், தன பூஜை, வாஸ்து ஹோமம், முதலாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, மூன்றாம் காலயாக சாலை பூஜைகள் முடிந்த பின், புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. சுற்று வட்டார கிராம வாசிகள் பங்கேற்று, தீபம் ஏற்றி, அம்மனை வழிபட்டனர்.