பதிவு செய்த நாள்
27
செப்
2017
01:09
சென்னை: ’தினமலர்’ வழங்கும், ’அரிச்சுவடி ஆரம்பம்’ என்ற நிகழ்ச்சியில், பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான கல்விப் பயிற்சியை துவங்குவதற்கும் உகந்த நாளாக இருப்பது, விஜயதசமி. வரும், 30ம் தேதி, விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில், இளம் தளிர்களுக்கு எழுத்தறிவை துவக்கி வைக்கும், ’அரிச்சுவடி ஆரம்பம்’ என்ற நிகழ்ச்சி, நமது நாளிதழ் சார்பில் நடத்தப்படுகிறது. சென்னை, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மற்றும், தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:30 மணிக்கு, நடைபெற உள்ளது. இதில், கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன், பாரத் கலாச்சார் துணை செயலர், சுதா மகேந்திரா, சென்னை மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் சுதா சேஷய்யன், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., - ஆர்.நடராஜ், டாக்டர், கமலா செல்வராஜ், பத்திரிகையாளர் ஞானி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், உங்கள் வீட்டில் உள்ள, 2 வயது குழந்தையை அழைத்து வந்து, வித்யாரம்பம் செய்யலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, 99443 09682 மற்றும், 99443 09681 ஆகிய மொபைல் எண்களுக்கு, குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர்,முகவரி, மின்னஞ்சல், மொபைல் எண் ஆகியவற்றை, குறுஞ்செய்தி,’வாட்ஸ் ஆப்’மூலமாக அனுப்பி வைக்கலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, அனுமதி இலவசம். பங்கேற்கும் மழலைகளுக்கு பரிசு உண்டு.