நவராத்திரி ஒன்பதாம் நாளில் மதுரை மீனாட்சி சிவபூஜை அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். மகிஷனை வதம் செய்து தீமையை அழித்தாலும் உயிர்க்கொலை செய்த பாவம், தேவிக்கு உண்டானது. அதைப் போக்க அம்பிகை சிவனை பூஜித்தாள். மதுரையில் சுவாமியை விட அம்பிகையை உயர்ந்தவளாகக் காட்டுவதுண்டு. சுவாமிக்கு வலப்பக்கம் அம்பிகை இருப்பதால், அம்மனை முதலில் தரிசிப்பது மரபாக பின்பற்றப்படுகிறது. குடும்ப வாழ்வில் கணவன், தன் மனைவியை உத்தமமான இடத்தில் வைத்து, அவள் மீது அன்பு காட்டினால் கணவனை தெய்வமாக கருதுவாள் என்பதையும், கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையும் சிவபூஜை உணர்த்துகிறது. இதை தரிசித்தால் குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
பாட வேண்டிய பாடல் உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணுால் இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.