பதிவு செய்த நாள்
28
செப்
2017
12:09
திருக்கச்சூர்: திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, லலிதா சஹஸ்ரநாம பூஜை நேற்று நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, திருக்கச்சூர் கிராமத்தில், அந்தகார நிவாரணி என்ற இருள்நீக்கி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, நவராத்திரி விழா, 21ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. அதை தொடர்ந்து, உலக நன்மைக்காகவும், கிராம பொதுமக்கள் நன்மைக்காகவும், நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் துவங்கின. அதன் பின், சுமங்கலிகளுக்கு சவுபாக்கிய திரவியங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கினர். மாலை, 5:30 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பூஜையும், சாந்தி துர்கா பரமேஸ்வரி பூஜையும் நடந்தது. விழாவில், பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். வரும் 29ம் தேதி வரை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.