உடுமலை: உடுமலை கோவிலில் நவராத்திரி வழிபாடு கடந்த 21ம்தேதி முதல் துவங்கியது. கோவில்களில் கொலு வைத்து, அம்மனை அழைத்து வழிபட்டு வருகின்றனர். குறிஞ்சேரி துர்க்கை அம்மன் கோவிலிலும் நவராத்திரி சிறப்பு பூஜை நடக்கிறது. முதல் நாளிலிருந்து, சுற்றுப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு, துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி போல பலவேட மணிந்து, அவர்களை இறைவனாக பாவித்து, மாலை நவராத்திரி பூஜை துவங்கியதும் வழிபடுகின்றனர். வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.