பதிவு செய்த நாள்
30
செப்
2017
12:09
திருத்தணி: நவராத்திரி விழாவை ஒட்டி, மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு நாளை, தேங்காய் பூ அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், 39ம் ஆண்டு நவராத்திரி விழா, 21ம் தேதி துவங்கியது. மூலவர் அம்மனுக்கு காலை, மாலை இரு வேலைகள் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில், கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நாளை மதியம், 2:30 மணிக்கு, அபிஷேக பொருட்கள், மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கோவிலை அடையும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 4:00 மணிக்கு தேங்காய் பூ அலங்காரம் நடக்கிறது. 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வாண வேடிக்கைகளுடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் நவராத்திரி விழா, 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.