பதிவு செய்த நாள்
30
செப்
2017
01:09
மதுரை: ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், இளம் தளிர்களுக்கு கல்வி புகட்டும், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான கல்வி பயிற்சி அளிப்பதற்கும் உகந்த நாள், விஜயதசமி. அந்த நன்னாளான இன்று, இளம் தளிர்களுக்கு, எழுத்தறிவை துவக்கி வைக்கும், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ என்ற , நிகழ்ச்சி, ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டது.
விஜயதசமியை முன்னிட்டு தினமலர் சார்பில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கான அரிச்சுவடி நிகழ்ச்சி, மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை அரிசியில் அ எழுத வைத்தனர். தினமலர் சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கம், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில், இன்று காலை ,10:30 மணிக்கு, ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், கர்நாடக இசைக்கலைஞர் நித்ய ஸ்ரீமகாதேவன், பாரத் கலாச்சார் துணை செயலர், சுதாமகேந்திரா, சென்னை மருத்துவக்கல்லுாரி துணைமுதல்வர் சுதா சேஷய்யன், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., ஆர்.நட்ராஜ், டாக்டர் கமலா செல்வராஜ், பத்திரிகையாளர் ஞானி, சங்கரா மேல்நிலைப் பள்ளியின், நிர்வாக அறங்காவலர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ஹயகி ரிவர் கோயிலில் நடந்த வித்தயா ஆரம்பம் நிகழ்சியில் புதியதாக பள்ளி செல்லும் குழந்தைகள் நெல்லில் தமிழ் எழுத்துக்களை எழுதினர். இதேபோல் விஜயதசமியையொட்டி கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.