பதிவு செய்த நாள்
05
அக்
2017
03:10
வடலுார்: வடலுாரில் வள்ளலாரின் 195 வது ஆண்டு வருவிக்க உற்றநாள் (பிறந்த நாள்) விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது.
வள்ளலார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி மருதுாரில் பிறந்தார். அவரது 195 வது வருவிக்க உற்றநாள்(பிறந்த நாள்) முன்னிட்டு வள்ளலார் நிறுவிய வடலுார் சத்திய ஞான சபை, தருமச்சாலை, மருதுார் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வருவிக்க நாளை முன்னிட்டு கடந்த மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்த மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது. நேற்று மாலை திருஅருட்பா இன்னிசை வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளலார் வருவிக்க உற்றநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவற் பாராயணம், காலை 7.30 மணிக்கு தருமச்சாலையில் சன்மார்க்கக் கொடி உயர்த்துதல், வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் உள்ள ஞானசபை வழிபாட்டு மேடைக்கு சிறப்பு அலங்காம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஞானசபையில் அருட்பெரும் ஜோதி மாக மந்திரம் முழுங்க சிறப்பு வழிபாடு, தருமச்சாலை மேடையில் தொடர் சன்மார்க்க சொழ்பொழிவும், மற்றும் அன்னதானம் நடைபெற்றது. வள்ளலார் அவதரித்த மருதுாரில் மாலை 3 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றி சிறப்பு அன்னதானம், திருவருட்பா இன்னிசை நடைபெற்றது. இதில் நுற்றுக்கணக்கான சன்மார்க் பக்தர்கள் கலந்து கொண்டனர்.