பெரியகுளம், பெரியகுளம் ஷீரடிசாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம் காலை ஆரத்தியுடன் துவங்கியது. விக்னேஷ்வரபூஜை, சங்கல்பம், கணபதிஹோமம், சுதர்சனஹோமம் மற்றும் சாயி அஷ்டோத்திர ஹோமம் நடந்தது. பாபாவிற்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து, பகல் ஆரத்தி, சாவடி ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சங்கு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை எம்.எம்.பி.டி., டிரஸ்ட் நிர்வாகிகள் முத்துவிஜயன், முத்துமகேஷ்வரன் , சாய்பக்தர்கள் செய்திருந்தனர்.