ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2017 11:10
ராமநாதபுரம், ராமநாதபுரம் தியாகவன்சேரியில் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. தியாகவன்சேரி முத்துமாரியம்மன் கோயிலில் செப்., 26 ல் முத்துபரப்புதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. அக்., 3 ல் அம்மன் கரகம் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு கலை நிகழ்ச்சியும், வாண வேடிக்கைகளும் நடந்தது. அக்.4 ல் கும்மி கொட்டுதல், ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கரகத்துடன், பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது. பின் தியாகவன்சேரி கண்மாயில் அம்மன் கரகம், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.