பதிவு செய்த நாள்
08
டிச
2011
11:12
குருவாயூர் : குருவாயூரில் நடந்து வரும் செம்பை சங்கீத உற்சவத்தில், இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ராதாகிருஷ்ணன், கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடத்தினார். கேரளா, திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தற்போது குருவாயூர் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி, செம்பை சங்கீத இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று, நிகழ்ச்சிகள் நடத்தினர். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, கர்நாடக இசையில் அமைந்த கீர்த்தனைகளைப் பாடினார். சாருகேசி ராகத்தில் அமைந்த,"கிருபையா பாலய... எனத் தொடங்கும் கீர்த்தனையையும், பைரவி ராகத்தில் அமைந்த, "ஏனடி நோமு... மற்றும் ரேவகுப்தி ராகத்தில் அமைந்த, "கோபாலகா... ஆகிய கீர்த்தனைகளையும் அவர் பாடினார். அவர் தொடர்ந்து நான்காம் ஆண்டாக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.