பதிவு செய்த நாள்
08
டிச
2011
11:12
சபரிமலை: முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக, தமிழகம் தேனி மாவட்டம் வழியாக, சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் பலரும், கேரள எல்லையில் தாக்கப்பட்டதால், கடந்த இரு தினங்களாக, சபரிமலை, பம்பை பகுதிகளில் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து காணப்பட்டது. இதனால், நிலக்கல் பகுதியில், தமிழக வாகனங்கள் நிறுத்துமிடத்தில், வழக்கமாக வரும் வாகனங்களை விட, பாதியளவுக்கும் குறைவாகவே வாகனங்கள் காணப்பட்டன. சன்னிதானத்திலும், தமிழக பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தேனி, கம்பம், குமளி வழியாக செல்லவேண்டிய பல வாகனங்களும், தென்காசி, செங்கோட்டை வழியாக பம்பைக்கு, 130 கி.மீ., முதல் 150 கி.மீ., சுற்றிக் கொண்டு சென்றன. அதேபோல், சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய பக்தர்கள் வந்த வாகனங்கள், பழனிக்கு செல்ல முடியாமல், வேறு மார்க்கங்களில் நீண்டதூரம் சுற்றிக் கொண்டு செல்ல நேரிட்டது.