பதிவு செய்த நாள்
19
அக்
2017
11:10
தேனி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் கணேசகந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நேற்று காலை மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், கிருஷ்ணன்கோயில், மாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், கைலாசசபட்டி கைலாசநாதர் கோயில், காளாஸ்திரிநாதர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாம்பாற்று பக்த ஆஞ்சசநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஷீரடி சாய்பாபா கோயிலில் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.