பதிவு செய்த நாள்
19
அக்
2017
11:10
தேவகோட்டை:தேவகோட்டையில் ஐப்பசி முதல் நாளன்றும்,கடைசி நாளன்று தேவகோட்டை நகர், மற்றும்பிற பகுதி சுவாமிகள் எல்லையில் உள்ள விருசுழியாறு என்றழைக்கப்படும் மணிமுத்தாறில் தீர்த்தம் கொடுக்க வருவதுண்டு. ஐப்பசி முதல்நாளான நேற்று தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோயில், கோதண்டராமஸ்வாமி கோயில், ரங்கநாத பெருமாள் கோயில், கிருஷ்ணர் கோயில், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயில்களிலிருந்து சுவாமிகள் ஒரு சேர மணிமுத்தாறில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்தனர். சிறப்பு அபிேஷகங்களுக்கு பிறகு தீபாராதனை நடந்தது. சுவாமிகள் அனைத்தும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.வழி நெடுகிலும், பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி நாளன்று ஐப்பசி முதல் தேதி வந்து சுவாமிகள் தீர்த்தவாரி செயதது குறிப்பிடதக்கது. ஐப்பசிகடைசி நாளான்று குடமுழுக்கு தீர்த்தவாரி நடைபெறும் . நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோட்டூர், பெரியகாரை, நயினார்வயல் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமியுடன் பாதயாத்திரையாக மணிமுத்தாறு வந்தனர்.