Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உருகி சொல்லுங்கள் முருகன் பேரை ... பாண்டுரெங்கர் கோவிலில் மகாலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் பெரிய புத்தர் சிலை புனரமைக்க நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் பெரிய புத்தர் சிலை புனரமைக்க நடவடிக்கை தேவை

பதிவு செய்த நாள்

19 அக்
2017
12:10

தலைவாசல்: தலைவாசல் அருகே அமைந்துள்ள, தமிழகத்தின் பெரிய புத்தர் சிலையை, புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, தியாகனுார் ஊராட்சியில் பழமை வாய்ந்த புத்தர் சிலை உள்ளது. ஐந்தாம் நுாற்றாண்டை சேர்ந்த இந்த சிலை, அமர்ந்து தியானம் செய்யும் நிலையில் காட்சியளிக்கிறது. தியான நிலையில், தமிழகத்தில் உள்ள சிலைகளில் இதுவே பெரியது. இந்த சிலை, 8 அடி உயரம், 4.5 அடி அகலம் உடையது. சிலையின் மூக்கு மற்றும் வலது கையில் உள்ள பெருவிரல் சற்று சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், அவ்வூர் மக்களால் புத்தர் கோவில் கட்டப்பட்டது. 30 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட கோவில் கோபுரத்தில் நான்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் முன் பக்கத்தில் புத்தர் உருவம், தெற்கில் கண்ணனின் உருவம், மேற்கில் திருமாலின் நரசிம்ம அவதாரம், வடக்கில் கிருஷ்ண அவதாரம் என சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதேபோல, 5 அடி உயரம், 3 அடி அகலமுள்ள, ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு புத்தர் சிலையும் இங்கு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக வயல்வெளியில் கிடந்த இந்த சிலைக்கு, தியான மண்டபம் கட்டப்பட்டு, 2013ல், திறக்கப்பட்டது.

சேலம் வரலாற்று ஆய்வு மைய குழு தலைவர் பொன். வெங்கடேசன் கூறியதாவது: தியான மண்டபத்தை சுற்றி, பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பூங்கா அமைப்பதுடன், பார்வையாளர்கள் அமர்வதற்கு கல் திட்டைகள் ஏற்படுத்த வேண்டும். பெரிய சிலை அமைந்துள்ள கோவிலுக்கு, சொந்தமாக நிலங்கள் உள்ளன. பிரகாரத்தை மையப்படுத்தி, கோவிலை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆறகளூர் ஏரியில் படகு சவாரி வசதி செய்து, புத்தர் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக மாற்றும் திட்டத்தை, சேலம் முன்னாள் கலெக்டர் மகரபூஷணம் முயற்சி செய்தார். இத்திட்டத்திற்கு, உயிரூட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar