பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
குமாரபாளையம்: குமாரபாளையம், பாண்டுரெங்கர் கோவிலில், மகாலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரெங்கர் கோவிலில், தீபாவளியை முன்னிட்டு, மகாலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி பாண்டுரெங்கர், மகாலட்சுமி தாயார், விடோபா தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, மஞ்சள் கட்டி பிரசாதம், மஞ்சள் அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து, விழா குழுவினர் கூறியதாவது: ஆண்டுதோறும் தீபாவளி திருநாளில் இந்த பூஜை நடப்பது வழக்கம். திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமணம் கைகூடும்; குழந்தை இல்லாதவர்களுக்கு மக்கட்பேறு உண்டாகும்; தொழில் வளம், செல்வம் பெருகும்; தீய சக்திகள் நம்மை அணுகாமல் பாதுகாக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.