பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
நாமக்கல்: தலமலை, சஞ்சீவராயன் பெருமாள் கோயிலில், கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த தலமலையில், சஞ்சீவராயன் பெருமாள் கோயில் உள்ளது. 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக் கோயிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், சுவாமியை வழிபட்டு செல்வர். இரண்டு அடிக்கும் குறைவான, அகலம் உள்ள கோயில் பிரகாரத்தின் சுவரில் நடந்து சென்று, பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். கடந்த, 14ல், புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். அதில், பலரும், பிரகார சுவரில் கிரிவலம் வரத்துவங்கினர். அப்போது, திருச்சி மாவட்டம்,முசிறியை சேர்ந்த ஆறுமுகம், 28, கிரிவலம் வந்தபோது, கால் தவறி, மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.இச்சம்பவம், பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, பிரகார சுவரில் கிரிவலம் வருவதற்கு, எருமப்பட்டி போலீசார் தடை விதித்துஉள்ளனர்.