சபரிமலை: சபரிமலையில் இன்று சித்திரை ஆட்ட திருநாள் பூஜை நடக்கிறது. மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மார்த்தாண்டவர்மா சபரிமலை ஐயப்பன் மீது அதிக பக்தி கொண்டிருந்தார். பாதை வசதிகள் இல்லாத அந்த காலத்திலும் படை பரிவாரங்களுடன் சபரிமலை சென்று வழிபாடு நடத்தி அங்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். மண்டலபூஜை நாளில் ஐயப்பன் சிலையில் அணிவிக்கும் தங்க கவசம் இவர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியது.இதனால் இவரது பிறந்த நாளை ஒட்டி ஒரு நாள்சபரிமலை நடை திறந்து திருவிதாங்கூர் அரண்மனை சார்பில்சிறப்பு பூஜைகள் நடைபெறும். தற்போது ஐப்பசி மாத பூஜைகள் சபரிமலையில் நடந்து வருகிறது.மூன்றாம் நாளான இன்று சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகள் நடைபெறுகிறது. இன்று திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் சிறப்பு பூஜைகளும், அபி ேஷகமும் நடைபெறும்.ஐப்பசி மாத பூஜைகள் முடிந்து வரும் 21ம்தேதி இரவு 10:00மணிக்கு நடை அடைக்கப்படும்.