கேதர்நாத்: காஷ்மீரின் குரேஷ் பகுதியில் நேற்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, இன்று உத்தர்கண்ட் மாநிலம் கேதர்நாத்தில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அங்கு, பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 2013ல் வெள்ளத்தினால், கேதர்நாத் பாதிக்கப்பட்ட போது, நான் பிரதமராக இல்லை. குஜராத் முதல்வராக இருந்த நான், மறுசீரமைப்புக்கு நான் உதவி செய்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுக்கு சங்கடம் ஏற்பட்டது. கேதர்நாத் கோயில் நவீன உள்கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பாரம்பரியம் மாற்றப்படவில்லை. இதன் மூலம் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்படவில்லை. மற்ற வழிபாட்டு தளங்களுக்கு முன்மாதிரி போன்று கேதர்நாத் மாற்றப்படும். உத்தர்கண்ட் மாநில மக்களின் ரத்தத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு நிறைந்துள்ளது. குடும்பத்தில் ஒருவராவது ராணுவ வீரராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.