பதிவு செய்த நாள்
20
அக்
2017
12:10
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சபரிமலை பூஜையை ஒட்டி, சென்னையில் இருந்து, கேரள மாநிலம், கொல்லத்திற்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
* சென்னை, சென்ட்ரலில் இருந்து, நவ., 13 முதல், 2018 ஜன., 17 வரை, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில், கொல்லத்திற்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், மாலை, 6:20க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 11:00க்கு, கொல்லம் சென்றடையும்
* கொல்லத்தில் இருந்து சென்னைக்கு, நவ., 14 முதல், ஜன., 18 வரை, செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில், மாலை, 4:15க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 8:30க்கு, சென்ட்ரல் வந்தடையும்
* கொல்லத்தில் இருந்து, சென்னைக்கு, ஜன., 16ல் இயக்கப்படும் சுவிதா ரயில், மாலை, 4:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:30க்கு, சென்ட்ரல் வந்தடையும்
* சென்னையில் இருந்து, நவ., 17 முதல், ஜன., 19 வரை, வெள்ளிக் கிழமைகளில், இரவு, 10:30க்கு இயக்கப்படும் சுவிதா ரயில், மறுநாள் மதியம், 2:30க்கு, கொல்லம் சென்றடையும்
* கொல்லத்தில் இருந்து சென்னைக்கு, நவ., 11 முதல் டிச., 17 வரையும், ஜன., 7 மற்றும், 21ம் தேதிகளிலும், மாலை, 3:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:20க்கு, சென்ட்ரல் வந்தடையும்
* கொல்லத்தில் இருந்து சென்னைக்கு, டிச., 24, 31, ஜன., 14ம் தேதிகளில், மாலை, 3:15க்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 7:20க்கு, சென்ட்ரல் வந்தடையும். பயணியருக்கான முன்பதிவு துவங்கி விட்டதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.