Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி ... பழநி மலையில் கஸ்தூரி: பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது பழநி மலையில் கஸ்தூரி: பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

21 அக்
2017
10:10

திருத்தணி : முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று துவங்கியது. காலை முதல் இரவு வரை சண்முகப்பெருமானுக்கு நடந்த லட்சார்ச்சனையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து இரண்டாவது நாளில் கந்தசஷ்டி விழா துவங்கி, ஏழு நாட்கள் நடப்பது வழக்கம். இதையொட்டி, சண்முகப்பெருமானுக்கு, காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனை விழா மற்றும் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. நடப்பாண்டிற்கான கந்தசஷ்டி விழா, நேற்று காலை, யாக சாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை துவங்கி, இரவு, 8:00 மணி வரை நடந்தது.

முதல் நாள் விழாவில், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று, பட்டு அலங்காரம், நாளை மற்றும் 23ல், தங்க கவசம் சாத்தப்படுகிறது. தொடர்ந்து, 24ம் தேதி, திருவாபரணம், 25ல், வெள்ளி கவசம் மற்றும் சந்தனக் காப்பு போன்ற அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை காட்டப்படுகிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு, திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. கந்தசஷ்டி முடியும் வரை, மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில், திருத்தணி முருகன் திருவடி சபை சார்பில், பக்தி இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

முதல் நாள் நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, முருகப்பெருமானை தரிசித்தனர். இதே போல், முருகன் துணை கோவிலான திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள ஸ்ரீகோட்ட ஆறுமுக சுவாமி கோவிலி லும், நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று மூலவருக்கு பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar