சாயல்குடி, சாயல்குடி வள்ளிதேவசேனா சமேத வழிவிடுமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. நேற்று காலை 8 :00 மணிக்கு கணபதி ஹோமம், மழைவேண்டி வருண சங்கல்ப பூஜை, உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிவாச்சாரியார்கள் பக்தர்கள் மீது மலர்களை துாவி ஆசி வழங்கினர். அன்னதானம் நடந்தது.