பதிவு செய்த நாள்
01
நவ
2017
11:11
சென்னை : சமூகத்தில், சமதர்மத்தை போதித்தவர் ராமானுஜர், என, பேராசிரியர், சுஜாதா பேசினார். சென்னை, தியாகராஜர் கல்லுாரியில், ராமானுஜரின் ஆன்மிக ஒருமைப்பாடு என்ற தலைப்பில், தியாக ராஜர் கல்லுாரியின் தமிழ் துறையும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திவ்யபிரபந்த செயல் திட்டமும் இணைந்து, இரண்டு நாள் கருத்தரங்கத்தை நடத்தின. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், பேராசிரியர், அரங்க ராமலிங்கம், சுஜாதா உள்ளிட்டோர் பேசினர். சுஜாதா பேசியதாவது: வட சென்னையில், சர் தியாகராஜர், தீண்டாமை ஒழிப்பு, மாநகராட்சியில் நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டார். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்க துவக்க விழாவில், ஆய்வுக்கோவை நுால் வெளியிடப்பட்டது. சென்னை பல்கலையின் முன்னாள் தமிழ் மொழித்துறை தலைவர், வ.ஜெயதேவன் நுாலை வெளியிட, கல்லுாரி செயலர், பி.குமாரசாமி பெற்றுக் கொண்டார் விழாவில், பல்வேறு கல்லுாரிகளின் பேராசிரியர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.