கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷ விழா நடந்தது. பிரதோஷத்தையொட்டி கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, நந்தி சிலைக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.