பதிவு செய்த நாள்
02
நவ
2017
11:11
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி நெசவாளர் காலனி, மகாலிங்கேஸ்வரர் கோவிலில், மகாலிங்கேஸ்வரருக்கு, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், காரிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவில், எஸ்.வி.,ரோடு, ஆதிலிங்கேஸ்வரர் கோவில், நெல்லி நகர் லிங்கேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிபராசக்தி சிவன் கோவில், பாரதிபுரம் சிவன் கோவில், தீயணைப்பு நிலைய ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் சிவன் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம், பூஜைகள் நடந்தன.