பதிவு செய்த நாள்
04
நவ
2017
10:11
ஜப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, பழநியிலுள்ள சிவன்கோயில்களில் அன்னாபிஷேகம்
நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசியில் வரும் பவுர்ணமி திதியன்று, சிவன் கோயில்களில், உலக நலன்வேண்டி அன்னாபிஷேகம் செய்துவது வழக்கம். வெள்ளிக்கிழமை ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பழநி பெரியாவுடையார் கோயில், புதுநகர் யோகஸ்வரர், மற்றும் இடும்பன் மலைஅருகேயுள்ள பஞ்சமுக பிரபஞ்சநாதர் கோயிலில் சிவலிங்கத்திற்கு அன்ன த்தால் அபிஷேகமும், சர்ப்ப ஜடாதாரி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
பழநி அடிவாரம் மதனபுரம் அண்ணாமலையார் உண்ணாமுலை நாயகி கோயில், நேதாஜிநகர் கமாட்சிஏகாம்பரேஸ்வரர் போன்ற பல்வேறு இடங்களிலுள்ள சிவன் கோயில்களில், மாலை யில் சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வேடசந்தூர் அய்யானார் கோயிலில், ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு
அன்ன அபிஷேகம் (அன்னக்காப்பு) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிவனுக்கு, சிறப்பு ஆராதனைகளை தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில்
பூசாரி சண்முகம் தலைமையிலான குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பழநி பஞ்சமுக பிரபஞ்ச நாதர் கோயிலில் ஞான தண்டாயுதபாணிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்ய ப்பட்டது.