திருப்பூர் : திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ராமாயண திருவிழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கம்பன் கழக அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, போட்டிகளை துவக்கி வைத்தார். "மணியம் கிளாசிக் உரிமையாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். பெண்களுக்கு பேச்சு, பாட்டு, கோலப்போட்டிகள், குழந்தைகளுக்கு மாறுவேட போட்டிகள் நடத் தப்பட்டன. திருப்பூர் சுற்றுப்பகுதி பள்ளி, கல் லூரிகளை சேர்ந்த ஆசிரியைகள், பெண்கள், குழந்தைகள் 100க்கும் மேற்பட் டோர் போட்டிகளில் பங்கேற்று, தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்; நடுவர் குழுவினர் மதிப்பெண் வழங்கினர். பேச்சுப்போட்டியில், பொங்குபாளையம் விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரி முதலிடம்; திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியை காயத்ரி இரண்டாமிடம்; வள்ளி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியை பானுமதி மூன்றாமிடம் பிடித்தனர். பாட்டுப்போட்டியில், திருப்பூரை சேர்ந்த விசாலாட்சி முதலிடம்; காயத்ரி இரண்டாமிடம்; தேவி மூன்றாமிடம் பெற்றனர். கோலப்போட்டியில், சீதை அக்னி பரவேசம் இறங்கிய காட்சியை தத்ரூபமாக வரைந்த சிக்கண்ண செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை காந்திமதி முத லிடம்; திருப்பூரை சேர்ந்த தேவிகா இரண்டாமிடம்; வனிதா மூன்றாமிடம் பிடித்தனர். குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டியில், குகன் வேடம் அணிந்து வந்த பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி ஹரிணி முதலிடம்; சீதை வேடத்தில் வந்த சிக்கண்ண செட்டியார் பள்ளி மாணவி தாரணி இரண்டாமிடம்; அனுமன் வேடத்தில் வந்த அதே பள்ளி மாணவன் ஹரிகரன் மூன்றாமிடத்தை தட்டிச் சென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா, கம்பன் கழக அறங்காவலர் ராமசாமி தலைமையில் நடந்தது. "சூர்யா ஜுவல்லரி சுகுமாறன், போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தோருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.