புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சாய்பாபா பிரார்த்தனை மண்டபத்தில், பாபாவின் பாதுகை தரிசனம் நேற்று துவங்கியது. சீரடி சாய்பாபாவின் புனித பாதுகைகளை உலக முழுவதும் உள்ள பக்தர்கள் தரிசனம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் 3 பாபா ஆலயங்களை தேர்வு செய்துள்ளனர். அதில் புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள பாபா ஆலயமும் ஒன்றாகும். இ.சி.ஆரில் பிள்ளைச்சாவடியில் உள்ள சாய்பாபா பிரார்த்தனை மண்டபத்தில் சீரடி சாய்பாபாவின் 100வது ஆண்டு சமாதி தின ஆராதனை விழா நேற்று துவங்கியது. பாபா உயிருடன் இருந்தபோது அணிந்த பாதுகை பொருட்கள் சீரடியில் இருந்து வந்தது. அதன் தரிசனம் நேற்று மதியம் 3:00 மணி முதல் இரவு 10:30 மணிவரையிலும், இன்று (11ம் தேதி) காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை நடைபெறுகிறது.