பதிவு செய்த நாள்
11
நவ
2017
01:11
மதுரை: கார்த்திகை என்றாலே பெண்களின் விருப்ப விழாவாக வரவேற்கப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றி, லட்சுமி கடாட்சத்தை வரவேற்பர். மகாதீபத்தன்று 3 நாட்கள் வீட்டு வாசலில் வண்ணகோலமிட்டு அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தி, பெண்கள் குதூகலமாக கொண்டாடுவர். இவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் மதுரையில் கண்ணை கவரும் புதுவித கார்த்திகை விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.
மீனா கலைப்பொருள் அங்காடி உரிமையாளர் சி.மது கூறியதாவது; கார்த்திகை, நவராத்திரி விழா காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் புதுவித விளக்கு, கொலு பொம்மைகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டு லட்சுமி பாதம் விளக்குகளை அறிமுகம் செய்துள்ளோம். வீடு முன், விளக்கேற்றும் பெண்கள் லட்சுமி பாதம் விளக்கை வீட்டு வாசலை நோக்கி வைத்தால், வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்ற நோக்கில் இப்புதிய விளக்கை தயாரித்துள்ளோம்.
வாழ்க்கையில் நற்சிந்தனைகளை ஏற்படுத்தும் விதமாக விளக்கில் ஸ்வஸ்திக் சிம்பல் இடம் பெற்றுள்ளது. பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தும் விதமாகவே களிமண்ணால் கார்த்திகை விளக்குகள் தயாரித்து விற்கிறோம். கோல்கட்டா, பெங்களூரூ, திண்டுக்கல், மானாமதுரையில் இருந்து கார்த்திகை விளக்குகள் வாங்குகிறோம். இது தவிர கருங்கற்களால் தயாரிக்கப்பட்ட பழமை மாறாத அகல் விளக்குகளும் கார்த்திகைக்கு விற்பனைக்கு வந்துள்ளன, என்றார். கார்த்திகை விளக்குகளை அறிய 94431 89179.