Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகைக்கு ஸ்பெஷல் விளக்குகள் ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளின் 113வது அத்யயன மகோற்சவம் ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

11 நவ
2017
05:11

தர்மபுரி: ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்து, காலபைரவரை தரிசனம் செய்வது வழக்கம். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிேஷகங்கள், 1,008 அர்ச்சனை, 28ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  இதையடுத்து, காலை, 11:00 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar