பலமாக உள்ளது தஞ்சை பெரிய கோயில்: தொல்லியல் துறை இயக்குனர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2017 11:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் பலமாக உள்ளது; எனவே, அச்சம் அடைய வேண்டாம், என, இந்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜாம்வால் தெரிவித்தார். இந்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜாம்வால், தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், முதுநிலை பராமரிப்பு அலுவலர் சந்திர சேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர், தஞ்சை பெரிய கோவில் முழுவதையும் சுற்றிப்பார்த்து, அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்,ஜாம்வால் கூறியதாவது: தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்தோம். எந்த பழமை வாய்ந்த கட்டிடமும் விரிசல் ஏற்படும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது.ஒரு சில இடங்களில் விரிசல் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்காக இந்த கோவில் சேதம் அடைந்து விடும் என்று அச்சம் அடைய வேண்டாம்.தஞ்சை பெரியகோயில் பலமாக உள்ளது. விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை சீர் செய்யும் பணி முன்னெச்சரிக்கையாகவே நடவடிக்கையாக விரைவில் துவங்கும். இவ்வாறு கூறினார்.