பதிவு செய்த நாள்
14
நவ
2017
11:11
பொள்ளாச்சி: சிவன் கோவில்களில் சிலையில்லாமல், ஐந்து வேல்கள் மட்டுமே மூலவராக பூஜிக்கப்படுவது கப்பளாங்கரை பார்வதி உடனமர் பரமசிவன் கோவிலில் மட்டுமே. இந்த கோவிலில், மூலவருக்கு சிலை வடிவம் இல்லை ; மாறாக வேல் வடிவம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பரமசிவன் திருவீதி உலா வந்தபோது, பார்வதிக்கு ஏற்பட்ட தாக த்தை தீர்க்க , தனது சூலாயுதத்தால், பாறைய ை பிளந்து தண்ணீரை வரவழைத்த இடம் இது தான். இதற் கு ‘கல்பிளந்தான்கரை’ என்ற பெயரும் உண்டு. நாளடைவில், இப்பெயர் கப்பளாங்கரையாக மருவியதாக கூறப்படுகிறது.
கோவில் முன், வடகிழக்கு பகுதியில், சிவபெருமானால் உருவாக்கப்பட்டமாமாங்க தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் எதிரே, பார்வதி உடனமர் பரமசிவன் கோவில் உள்ளது. கொங் கு மண்டலத்தில் உள்ள, 21 பரமசிவன் கோவில்களில், கப்பளாங்கரை கோவிலில் மட்டுமே இறைவனுக்கு சிலை வடிவம் இல்லை. மாறாக , ஐந்து வேல்களின் வடிவம் கொண்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். வேலை மூலவராக கொண்ட கோவில்களில், இங்கு மட்டுமே அம்பாளுக்கு தனிக்கோவில் உள்ளது. 1998, 2010ம் ஆண்டுகளில் மகா கும்பாபிேஷகம் நடந்துள்ளது. உடல் அரிப்பு, தடிப்பு, விஷ கடிகளுக்கு, பரமசிவன் காலடியில் இருக்கும் கட்டுநீர் தீர்த்தம் பெற்று, பக்தர்கள் குணமடைகின்றனர். திருமண தாமதம், குழந்தை வரம் கேட்டும் அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். நாள் தோறும் உச்சிகால பூஜை நடக்கிறது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜையும், அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை ஜோதி, சிவராத்திரி, ஆவணி திருவோணம் மற்றும் குரு, சனி பெயர்ச்சி நாட்களில் சிறப்பு பூஜையும், பரிகார பூஜையும் நடக்கிறது. ஆடிப்பெருக்கின் போது, ஒவ்வொரு ஆண்டும் கோவில் குளத்தின்,12 படிகள் நீரில் மூழ்கி இருக்கும். குளத்து தண்ணீர் பொங்கி, ஆற்றில் கலந்து அரபிக்கடலில் கலந்ததாக கூறப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக
, பொள்ளாச்சியில் இருந்து, மூன்று டவுன் பஸ்கள் கப்பளாங்கரைக்கு இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து வடசித்துார் வழியாகவும் பஸ் வசதி உள்ளது.