பதிவு செய்த நாள்
20
நவ
2017
12:11
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில், தேசிய அளவிலான, முத்துஸ்வாமி தீட் சிதர் இசை நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம், ஏனாத்துார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹாவித்யாலயா பல்கலைக்கழகத்தில், வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதன் பகுதியாக, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, முத்துஸ்வாமி தீட் சிதரின் கிருதிகளை இளைய தலை முறையினருக்கு சேர்க்கும் வகையில், தேசிய அளவிலான மூன்று நாள் இசை நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழகத்தின் வடமொழி- இந்தியப் பண்பாட்டுத் துறை மற்றும் கவின்கலைச் சங்கம் இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர், வி.எஸ்.விஷ்ணுபோத்தி தலைமை வகித்தார். இதில், நாட்டின் பல இடங்களிலிருந்தும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று, முத்துஸ்வாமி தீட் சிதரின் பெருமைகளை கூறி, அவரின் கிருதிகளைப் பாடினர்.
தேசூர் செல்வரத்தினம் மற்றும் காஞ்சி சண்முகசுந்தம் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி, நெய்வேலி சந்தானகோபாலன் குழுவினரின் முத்துஸ்வாமி தீட் சிதரின் கிருதிகள் பற்றி விளக்கவுரையாற்றினர்.வாய்ப்பாட்டு, புல்லாங்குழலிசை, நடன நிகழ்ச்சி, வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், வீணை காயத்ரி சிறப்புரையாற்றினார். இயற்பியல் துறை தலைவரும், கவின் கலைசங்கத்தின் இயக்குனருமான பேராசிரியர், கே.வெங்கடராமன், வடமொழித்துறையின் துணை பேராசிரியர், சங்கர நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். விழாவில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.