பதிவு செய்த நாள்
20
நவ
2017
12:11
காளிப்பட்டி: காளிப்பட்டி ஆஞ்சநேயருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. சேலம் அருகே, காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. கார்த்திகை முதல் ஞாயிறு முன்னிட்டு, அங்கு, நேற்று அதிகாலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள், ஆஞ்சநேயருக்கு அபி?ஷகம் செய்து, மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அடுத்த தமிழ் மாத முதல் ஞாயிறு, டிச., 17ல் வருகிறது. அன்று, மார்கழி அமாவாசை, அனுமன் ஜெயந்தி விழா, மார்கழி முதல் ஞாயிறு என, முப்பெரும் விழா நடக்க உள்ளது.