பதிவு செய்த நாள்
22
நவ
2017
12:11
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், செல்லாண்டியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. பள்ளிபாளையம், ஆர்.எஸ்.சாலையில், பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் என்று, பொதுமக்களால் அழைக்கப்படும், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி, 18ல் திருவிழா மற்றும் மாதம் முழுவதும், பொங்கல் வைப்பது, கிடாய் வெட்டுவது போன்ற நிகழ் ச்சிகள் நடக்கும். இந்தாண்டும் ஆடி மாதம் திருவிழா சிறப்பாக நடந்தது. இந்நிலையில், அற நிலைய துறை சரக ஆய்வாளர் சுந்தர், செயல் அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னி லையில், கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 55 ஆயிரத்து, 205 ரூபாய் இருந்ததாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.