பதிவு செய்த நாள்
25
நவ
2017
12:11
பள்ளிப்பட்டு : பாண்டரவேடு கிராமத்தில் உள்ள, பெரியபாளையம் பவானியம்மன் கோவில் புனரமைப்பு பணிகள், துவங்கியுள்ளன. வரும், ஆடி மாதத்திற்குள், புனரமைப்பு பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பள்ளிப்பட்டு அடுத்த, பாண்டரவேடு கிராமத்தில், சிவன், தொப்பையம்மன் மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் உள்ளிட்ட கோவில்கள் அமைந்துள்ளன.பழமையான இக்கோவில்களில், கைலாசநாதர் மற்றும் தொப்பையம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, கிராமத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள, பவானியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளை, கிராமத்தினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் பங்களிப்புடன், கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மரத்தடியில் இருந்த கோவில், தற்போது கட்டடமாக கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, பக்தர்களிடம் இருந்து நன்கொடையை, கோவில் நிர்வாகம் எதிர்பார்த்து உள்ளது.