பொள்ளாச்சி சவுடாம்பிகை அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2011 11:12
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில், சிவன் கோவில்களில் சங்காபிஷேக பூஜை நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை சங்காபிஷேக பூஜை நடந்தது. காலை 9.00 மணிக்கு சங்குகள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சங்குகள் சுத்தம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. மாலை 4.00 மணிக்கு வலம்புரி சங்கு உட்பட 1008 சங்குகள் கொண்டு சிவலிங்கம் போல் வடிவமைக்கப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அர்த்தநாரீஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில், கணபதி ஹோம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. சங்கு கொண்டு வடிவமைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பல்வேறு வகையான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டது. இரவு மகா தீபாராதனை நடந்தது.