திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர் சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சாயல்குடி: டி.எம். கோட்டையில் கருணாகடாட்சி சமேத செஞ்சடை நாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜையில் திவான் மகேந்திரன், நிர்வாக அலுவலர் சாமிநாத துரை, ஊராட்சி தலைவர் நாகராஜ், பிரதோஷ கமிட்டி தலைவர் ஸ்ரீதர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.