பதிவு செய்த நாள்
14
டிச
2011
11:12
குளித்தலை: அய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர் மலைக்கோவில் பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் சோமவாரம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மேலும், பவுர்ணமி கிரிவலம் நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் மலையேறியும், மலையின் அடிவாரத்தில் சுற்றி வந்து ஸ்வாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் படிக்கெட் ஏறும் வழியில் குடிநீர் தொட்டி இருக்கிறது. அந்த தொட்டியின் மூலம் பொதுமக்கள் பயன்படுத்திய கழிவு நீர்கள் முழுவதும் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டில் தண்ணீர் ஓடி வருகிறது.
பக்தர்கள் அனைவரும் கழிவு நீரில் நடந்து ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.கோவில் உட்புறத்தில் சுகாதாரம் இல்லாமல் பொதுமக்களு க்கு நோய்கள் ஏற்படும் வகையில் திண்பண்டங்கள் மற்றும் பே ப்பர், இலைகள் போடப்பட்டுள்ளன. மேலு ம், மலை அடிவாரத்தில் கழிப்பறை இருந்தும் பூட்டி இருப்பதால் பக்தர்கள், கோவி லை சுற்றியுள்ள முட்புதர்களில் மலம், சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் ரசீது சீட்டு பணம் பெறுவதில் அக்கரை காட்டுவது போல், பொது சுகாதாரத்திலும் கோவில் நிர்வாகம் அக்கறை காட்டினால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாகவும், சுகாதாரத்துடனும் ஸ்வாமியை தரிசனம் செய்ய வசதியாக இருக்கும்.எனவே கரூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையை சேர்ந்த அதிகாரிகள் அய்யர்மலை கோ விலில் உள்ள சுகாதார கேட்டை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.