பதிவு செய்த நாள்
28
நவ
2017
01:11
சேலம்: சேலம், திருமலைகிரி கோவில் வழக்கு, டிச.,18 க்கு ஒத்திவைக்கப்பட்டது. சேலம், திருமலைகிரியில் உள்ள சைலகிரீஸ்வரர் கோவில் கடந்த, 2015ல் புனரமைக்கப்பட்டது. கோவிலில் நுழைவது குறித்து, இரு தரப்பினர் இடையே மோதல் உருவானது. 2015 மார்ச், 3ல் கோவில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சுற்றியுள்ள, 18 கிராமங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் ஒரு தரப்பினர் வழக்கு தொடர்ந்து, கோவிலுக்குள் செல்ல, நீதிமன்ற உத்தரவை பெற்றனர். மற்றொரு தரப்பினர், சேலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. டிச., 18க்கு ஒத்திவைத்து, நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.