பதிவு செய்த நாள்
30
நவ
2017
12:11
புதுச்சேரி: காளத்தீஸ்வரர் கோவிலில், ஏகாதச ருத்ராபிஷேகத்தையொட்டி, சிறப்பு ஹோமம் நடந்தது. புதுச்சேரி, மிஷன் வீதியில், ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையுடன், ஏகாதச ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் துவங்கியது. தொடர்ந்து, காலை 7:00 மணி முதல், ஏகாதச ருத்ராபிஷேகம், கலசாபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. காளத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று (30ம் தேதி) மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு, அக்னி பிரதிஷ்டை, ஹோமம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு, மகா சுதர்சன ஹோமம், 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம், 11:00 மணிக்கு, கடம் புறப்பாடு, புரோஷணம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.