பதிவு செய்த நாள்
30
நவ
2017
12:11
கோபிசெட்டிபாளையம்: பாரியூர், கொண்டத்து காளியம்மன் கோவிலில், அன்னதான திட்டம் துவங்கிய, 15 ஆண்டுகளில் இதுவரை, 4.59 லட்சம் பக்தர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே பிரசித்தி பெற்ற, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. உச்சிக்கால பூஜை முடிந்ததும் மதியம், 12:15 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விசேஷ நாட்களில், 100 பேர், பிற நாட்களில், 70 பேர் சாப்பிடுகின்றனர். நன்கொடை, நிரந்தர கட்டளைதாரர் மற்றும் அன்னதான உண்டியல் வருவாய் மூலம், அன்னதானம் வழங்கப்படுகிறது. வாழை இலையில் சுடச்சுட சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொரியல், உப்பு, ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. மாதந்தோறும், 60 முதல், 65 ஆயிரம் ரூபாய் செலவில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. கடந்த, 2002 ஆக., 15ல் துவங்கிய, தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்துக்கு, பக்தர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அன்னதானம் திட்டம் துவங்கிய, 15 ஆண்டுகளில் கடந்த, 24 வரை மொத்தம், நான்கு லட்சத்து, 59 ஆயிரத்து, 421 பேர் சாப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.