பதிவு செய்த நாள்
14
டிச
2011
11:12
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு நேற்று விக்னேஸ்வர பூஜை நடந்தது. மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று (14ம் தேதி) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகர கும்ப ராஜகோபுரம் கும்பாபிஷேகம், கிரகசாந்தி கணபதி, கழுவெளி சித்தர், தொள்ளாக்காது சித்தர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதனை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை 4.30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜை நடந்தன. இன்று (14ம் தேதி) காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகர கும்ப ராஜகோபுர தீபஸ்தம்ப மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. சிதம்பரம் குருக்கள் தலைமை தாங்குகிறார். கும்பாபிஷேகத்தை சென்னை குமாரபாபா நடத்தி வைக்கிறார்.வரும் 21ம் தேதி சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி 80 அடி உயர மகர கும்ப ஸ்தம்பத்தில் 8,000 லிட்டர் எண்ணெய் ஊற்றி பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட உள்ளது. ஏற்பாடுகளை கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.