பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கொடிமரம் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2017 11:12
பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னிதி கொடிமரத்தின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.கோவை, பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள, பரிவாரம் சன்னிதியில் ஒன்றான, பாலதண்டாயுதபாணி சுவாமி சன்னிதியில் இருந்த கொடிமரம் பாதிப்படைந்தது. இதனால், கோவில் நிர்வாகத்தினர், புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்தனர். உபயதாரர்கள் மூலமாக, ஆகம முறைப்படி தேக்குமரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டது. பழைய கொடிமரம் பாலாலயம் செய்யப்பட்டு, கடந்த, 24ல் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று காலை கொடிமரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், கொடிமரத்துக்கும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின், புனித நீரை கொண்டு கொடிமரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது; பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.