பதிவு செய்த நாள்
02
டிச
2017
11:12
ராசிபுரம்: பட்டணம், பத்ரகாளியம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. ராசிபுரம் அடுத்த, பட்டணத்தில் பத்ரகாளியம்மன், கருப்பணார் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா யாத்ராதானம், கடம் புறப்பாட்டுடன் துவங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு, செல்வ விநாயகர், கற்பக விநாயகர், வட பத்ரகாளியம்மன் மூலவர் மற்றும் கருப்பணார் முதலிய பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* மல்லசமுத்திரம், லட்சுமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்துமாரியம்மன், முத்து விநாயகர், மதுரைவீரன் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்திருந்தனர்.