பதிவு செய்த நாள்
02
டிச
2017
12:12
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, ஸ்ரீ லட்சுமி நாராயணி பீடம், ஸ்ரீ மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.இதை முன்னிட்டு, யாக சாலை பூஜைகளும் அதை தொடர்ந்து, நேற்று காலை, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி கோவில், கோபுரங்களுக்கு, கும்பாபிஷேகம் மற்றும் மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.இதை தொடர்ந்து, ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள், அருளுரை வழங்கினார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.