திருவண்ணாமலை: தி.மலையில் மஹா தீபம் ஏற்றும் மலைப்பகுதிக்கு செல்வதற்கான டோக்கன் விநியோகம் துவங்கியது. அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 5 கவுண்டர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது. மலை ஏறு வதற்காக 2, 500 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.