உடுமலை சித்திபுத்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2017 12:12
உடுமலை; சித்தி புத்தி விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை, குட்டைத்திடலில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில், முதற்கால வேள்வி பூஜையுடன் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. நேற்று, காலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை, திருமுறைப்பாராயணம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டது. காலை, 10:00 மணி அளவில் சித்தி புத்தி விநாயகர் கோவிலின் விமான கோபுரத்துக்கு தீர்த்தங்கள் தெளித்து கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டனர்.