பதிவு செய்த நாள்
02
டிச
2017
04:12
திருவிளக்கு ஏற்றும் முன், அதன் உச்சி, ஐந்து முகங்கள், தீபஸ்தம்பம், பாதம் ஆகிய எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும். அப்போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளை மனதில் எண்ண வேண்டும். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாக ஒரு காரணம் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.