பதிவு செய்த நாள்
15
டிச
2011
11:12
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் முகத்துவார வாயிலில், புல்லட் புரூப் (குண்டு துளைக்காத) கதவுகள் அமைக்கப்பட உள்ளன. திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி எம்.கே.சிங் அறிக்கை: திருமலை கோவிலுக்கு பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என, மத்திய, மாநில உளவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. திருமலை கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக கோவிலின் முகத்துவார (புராதன) வாயிலில், "புல்லட் புரூப் கதவுகள் அமைக்கப்பட உள்ளன. சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் சிலரின் மீது எழுந்த புகார்களால், அவர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு மட்டும் உபயோகப்படுத்தப்படுவர். இவர்களது நடவடிக்கைகள் குறித்து, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. லட்டு, வடை போன்ற பிரசாத பொருட்களில் குளறுபடிகள் குறித்து ஆய்வு செய்ததில், இதில் மூவர் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, தேவஸ்தான நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமலை கோவில் கோபுரம், திருமலைராய மண்டபம், கல்யாண மண்டபம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை ஆய்வு செய்ய மண் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.